மோடியின் இலங்கை விஜயம் தொடர்பிலான பொய் பிரசாரங்களால் ஏமாற வேண்டாம்: ஜனாதிபதி

மோடியின் இலங்கை விஜயம் தொடர்பிலான பொய் பிரசாரங்களால் ஏமாற வேண்டாம்: ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

29 Apr, 2017 | 7:28 pm

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எதிர் கருத்துக்களைக் கொண்டுள்ளவர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தவறான பிரசாரங்களைக் கேட்டு நாட்டு மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது அழைப்பின் பேரிலேயே ஐக்கிய நாடுகளின் வெசாக் நிகழ்வுகளில் கலந்துகொள்ள இலங்கை வருவதாகவும் வேறு எவ்வித அரச உத்தியோகப்பூர்வ நிகழ்வுகளும் இடம்பெறாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் நல்லிணக்கத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தும் தீய சக்திகளை அடையாளம் கண்டு செயற்படுமாறும் ஜனாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்தார்

மட்டக்களப்பு – ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்விற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்