முதல் நாள் வசூலில் பிரமிக்க வைத்த பாகுபலி 2

முதல் நாள் வசூலில் பிரமிக்க வைத்த பாகுபலி 2

முதல் நாள் வசூலில் பிரமிக்க வைத்த பாகுபலி 2

எழுத்தாளர் Bella Dalima

29 Apr, 2017 | 4:50 pm

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் ”பாகுபலி தி கன்க்ளூஷன்” ( பாகுபலி 2 ).

இந்தப் படம் நேற்று வெளியாகியதுடன், முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது.

டப்பிங் படமாக ஹிந்தியில் வெளியாகியுள்ள பாகுபலி 2, முதல் நாளன்று சல்மான் கான் நடித்த சுல்தான், அமீர் கான் நடித்த டங்கல் என வசூலில் சாதனை செய்த இரு படங்களையும் மிஞ்சியுள்ளது.

முதல் நாளில் சுல்தான் 36. 54 கோடியையும் டங்கல் 29.78 கோடியையும் அள்ளியது. ஆனால், இந்த இரு படங்களையும் விட பாகுபலி 2 அதிக வசூல் எடுத்து சாதனை படைத்துள்ளது. முதல் நாளன்று ஹிந்தி பாகுபலி 2, 40 கோடி இந்திய ரூபாவை வசூலித்துள்ளது

தெலுங்கில் இந்தப் படம் 53 கோடியை வசூலித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் முதல் நாளில் அதிக வசூல் கண்ட படம் என்கிற சாதனையைப் படைத்துள்ளது. இந்த இரு மாநிலங்களில் மட்டும் முதல் மூன்று நாட்களில் நூறு கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் நாளன்று 11 கோடி இந்திய ரூபா வசூல் கிடைத்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், முதல் நாளன்று இந்தியாவில் மட்டும் 145 கோடி ரூபா கிடைத்துள்ளதாக அறியப்படுகிறது. இந்திய அளவில் இது ஒரு சாதனையாகவுள்ளது.

இனி வரும் இந்தியப் படங்கள், பாகுபலி 2- வின் வசூலை முறியடிக்கவே முயற்சி செய்யவேண்டும். அந்தளவிற்கு அதன் வசூல் பிரமிப்பூட்டும் விதத்தில் உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்