சிவராம் படுகொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் பூர்த்தி: நீதி நிலைநாட்டப்படுவது எப்போது?

சிவராம் படுகொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் பூர்த்தி: நீதி நிலைநாட்டப்படுவது எப்போது?

எழுத்தாளர் Bella Dalima

29 Apr, 2017 | 8:55 pm

ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

பிரபல ஊடகவியலாளர் சிவராம் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி வெள்ளை வேனில் கடத்தப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 இல் மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிகையில் 1989 இல் தன் முதல் கட்டுரையை எழுதினார்.

அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள்நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவலாக வாசிக்கப்பட்டன.

பத்தி எழுத்தாளராக, அரசியல் ஆய்வாளராக, படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட சிவராம்
ஆரம்பத்தில் 1980 களில் போராட்ட இயக்கம் ஒன்றில் இணைத்து கொண்டார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம், 1990களின் நடுப்பகுதியில்
அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றினார்.

தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வந்த சிவராம், அதற்காக பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் சந்தித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்து அதனை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்ற பெருமை தராகி சிவராமையே சாரும்.

சிவாரமின் படுகொலை நடந்து 12 வருடங்கள் கடந்து விட்டன, நீதி நிலைநாட்டப்படுவது எப்போது?

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்