ஆபத்தான வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு கைதான இளம்பெண் (Photos)

ஆபத்தான வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு கைதான இளம்பெண் (Photos)

ஆபத்தான வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு கைதான இளம்பெண் (Photos)

எழுத்தாளர் Bella Dalima

29 Apr, 2017 | 4:02 pm

கனடாவில் டொரன்டோவைச் சேர்ந்த மரிசா லாசோ என்ற 22 வயதான இளம்பெண்ணை பொலிஸார் நேற்று முன்தினம் (27) கைது செய்தனர்.

பல அடி உயரம் உள்ள இரும்பு கிரேனில் பல மணி நேரம் தனியாக அமர்ந்திருந்து பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பில் விசாரணை நடத்திய போது பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பெண் சிறுவயது முதல் வீரதீரச் செயல்களில் அதிகளவில் ஆர்வமுடன் பங்கேற்பார் என்றும், திரில்லாக இருப்பதற்காக யாரும் செய்ய முடியாத பல செயல்களைச் செய்வார் எனவும் தெரியவந்தது.

நண்பர்கள் சிலரிடம் விசாரணை செய்தபோது, இவர் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே படுத்திருப்பது, உயரமான கட்டிடத்தின் உச்சியில் நிற்பது, மின்கம்பிகளுக்கு மத்தியில் கால்களைத் தொங்கவிட்டவாறு அமர்ந்திருப்பது உள்ளிட்ட புகைப்படங்களை பொலிஸாருக்கு வழங்கி, விளக்கியுள்ளனர்.

அவருக்கு துணிச்சல் அதிகமே தவிர யாருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயற்பட மாட்டார் என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நிபந்தனைகள் மற்றும் 500 டொலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பல மணி நேரம் கிரேனில் அமர்ந்திருந்த இளம்பெண்ணைப் பற்றித் தான் தற்போது கனடாவில் பரபரப்பாக பேசிவருகிறார்கள்.

GNAPRIL26DROLET_848x480_930510403776

1297948840056_ORIGINAL 1297948845398_ORIGINAL

1297948844270_ORIGINALwebcropcranewomanjpg.jpg.size.custom.crop.1086x611


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்