GSP+ வரிச்சலுகை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் – ஹர்ஷ டி சில்வா

GSP+ வரிச்சலுகை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் – ஹர்ஷ டி சில்வா

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2017 | 7:32 pm

GSP+ வரிச்சலுகை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இந்த வரிச்சலுகையை நாட்டிற்கு மீள பெற்றுக் கொள்வதற்கு வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பாரிய பிரயதனங்களை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவத்த பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா…

[quote]நமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உலக நாடுகளுடன் ஒன்றிணைய வேண்டும் என்பதை நாம் அறிவோம். அப்படியென்றால் ஏற்றுமதியை தவிர்த்து நாட்டிற்குள் அபிவிருத்தியை காண முடியாது.எமக்கு GSP+ வரிச்சலுகை கிடைக்காது என பலர் தெரிவித்தனர்.இதற்கு நிபந்தனைகள் இடப்பட்டிருப்பதாக சிலர் தெரிவித்தனர்.நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளின் அடிப்படையிலேயே GSP+ வரிச்சலுகை வழங்கப்படுகின்றது.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்