வித்தியா படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்கள் விடுதலை

வித்தியா படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்கள் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2017 | 4:54 pm

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்கள் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் ஊர்காவற்துறை பதில் நீதவான் ஜோய் மஹில் மகாதேவா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் பாதுகாப்பை கருதி, உறவினர்களிடமே அவர்களை ஒப்படைக்க வேண்டும் என குற்றப் புலனாய்வு துறையினர் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் தான் தனியாகவே வாழ்ந்து வந்ததாகவும், உறவினர்கள் யாரும் இல்லை என்பதால் தன்னை விடுவிக்குமாறு 12 ஆம் இலக்க சந்தேகநபர் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் மக்களின் பலத்த எதிர்ப்பு நிலவும் தருணத்தில், சந்தேகநபர்களின் பாதுகாப்பு கருதியே உறவினர்களிடம் ஒப்படைக்க தீர்மானித்ததாக பதில் நீதவான் இதன்போது அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய சந்தேகநபர்கள் இருவரும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த படுகொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் 3ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்