யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் நியமனம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2017 | 2:57 pm

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

புதிய துணைவேந்தரின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ தொலைநகல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகவும், கணிதத் துறை தலைவராகவும் பேராசியர் ஆர்.விக்னேஸ்வரன் செயலாற்றியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்