பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2017 | 3:21 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 4 பேரையும் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் பி.பிறேம்நாத் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி இரவு நத்தார் பிராத்தனையில் கலந்துக் கொண்டிருந்தப் போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்