திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2017 | 4:20 pm

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் இன்று (28) காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற கட்டத்தொகுதிக்கு முன்னாள் சட்டத்தரணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

வேலையற்ற பட்டதாரி மாணவர்கள் கடந்த செவ்வாய்கிழமை நீதிமன்ற கட்டளையை அவமதித்து செயற்பட்டமைக்கு கன்டனம் தெரிவித்து இந்த அர்ப்பாட்டம் இ்டம்பெற்றது.

அவ்வாறு அவமதித்தவர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்