கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக யசரத் கமல்சிறி தெரிவு

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக யசரத் கமல்சிறி தெரிவு

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2017 | 6:38 pm

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் 2016 ஆம் ஆண்டின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக நியூஸ்பெஸ்ட்டின் பணிப்பாளரும் பொதுமுகாமையாளருமான யசரத் கமல்சிறி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை ஆரம்பமான வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் 40 ஆவது வருடாந்த மாநாடு ஸ்டெய்ன் கலையகத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த நிழ்வின் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா கலந்துக் கொண்டிருந்தார்.

மதத் தலைவர்கள், அதிதிகள், உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர்.

பல நிறுவனங்களூடாக பல்வேறு துறைகளில் இலங்கை மக்களுக்காக சேவையாற்றிய நிறைவேற்று அதிகாரிகள் பலர் இதன் போது கலந்துக் கொண்டிருந்தனர்.

இதேவேளை மிக கோலகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் முதல் அம்சம், வருடத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியை தெரிவு செய்வதாகும்.

வருடத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரிக்காக ஷிரான் மனுகுலசூரிய, கலாநிதி கிர்டிவான் கோர்டியன், எப்.எம்.முஷம்மில், ரம்ஷி காசிம் மற்றும் யசரத் கமல்சிறி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்