கல்விழான் பகுதியில் இரண்டு குழுக்களிடையே மோதல்: இருவர் காயம்

கல்விழான் பகுதியில் இரண்டு குழுக்களிடையே மோதல்: இருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2017 | 7:45 pm

முல்லைத்தீவு, கல்விழான் பகுதியில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும், அவர்கள் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அடுத்து காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக மல்லாவி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுமார் ஐந்து பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்