கல்குடாவில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

கல்குடாவில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2017 | 7:42 pm

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் நிர்மாணிக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸ் மாஅதிபரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

களுவாஞ்சிக்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்களிடம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுமார் இரண்டரை மணித்தியாலங்கள், குறித்த இரண்டு ஊடகவியலாளர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டள்ளது.

பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம் அடுத்தகட்ட விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸ் மாஅதிபருக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக களுவாஞ்சிக்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

தங்கள் மீதான தாக்குதல் குறித்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்