ஊர்காவற்துறை கர்ப்பிணித் தாய் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஊர்காவற்துறை கர்ப்பிணித் தாய் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2017 | 4:27 pm

ஊர்காவற்துறையில் கர்ப்பிணித் தாயொருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ஜோய் மஹில் மகாதேவா முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கர்ப்பிணித் தாயொருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்