இந்தியாவில் தஞ்சமடைந்த 28 பேர் இன்று தாயகம் திரும்பினர்

இந்தியாவில் தஞ்சமடைந்த 28 பேர் இன்று தாயகம் திரும்பினர்

இந்தியாவில் தஞ்சமடைந்த 28 பேர் இன்று தாயகம் திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2017 | 3:57 pm

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போது இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களில் 28 பேர் இன்று (28) தாயகம் திரும்பியுள்ளனர்.

இன்று () காலை ஒன்பது 45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து 18 பேரும், திருச்சியிலிருந்து 10 பேரும் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்

இதேவேளை, தமிழகத்திலிருந்து 46 அகதிகள் நேற்று தாயகம் திரும்பினர்.

கண்டியைச் சேர்ந்த 4 பேரும் கொழும்பைச் சேர்ந்த ஒருவரும் அடங்கலாக 46 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் திருகோணமலை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் வருகை தந்துள்ளனர்.

தாயகம் திரும்பும் அகதிகளுக்கு தேவையான தற்காலிக வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுவதோடு போக்குவரத்து உள்ளிட்ட சில தேவைகளுக்கான கட்டணங்களும் வழங்கப்படுவதாக மீள்குடியேற்ற அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்