டமஸ்கஸ் விமான நிலையம் அருகே பாரிய வெடிப்புச் சம்பவம்

டமஸ்கஸ் விமான நிலையம் அருகே பாரிய வெடிப்புச் சம்பவம்

டமஸ்கஸ் விமான நிலையம் அருகே பாரிய வெடிப்புச் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2017 | 12:49 pm

சிரிய தலைநகர் டமஸ்கஸ் விமான நிலையம் அருகே பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிர்சேதம் குறித்து தகவல் வரவில்லை.

சிரிய தலைநகர் டமஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விமான நிலையம் அருகே இருந்த வெடிபொருட்கள் சேமிப்பு கிடங்கில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் யாரால் நிகழ்த்தப்பட்டது?, பலியானவர்கள் எத்தனை பேர்? என்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

டமஸ்கஸ் விமான நிலையத்தில் பெரிய அளவிலான வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பதை சிரிய மனித உரிமைகள் கண்கானிப்பகத்தின் தலைவர் ராமி அப்தேல் ரஹ்மான் உறுதி செய்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்