25 வயது மூத்த ஆசிரியையை மணந்த மக்ரோன்: பிரான்ஸ் அதிபர் வேட்பாளரின் சுவாரஸ்ய காதல்

25 வயது மூத்த ஆசிரியையை மணந்த மக்ரோன்: பிரான்ஸ் அதிபர் வேட்பாளரின் சுவாரஸ்ய காதல்

25 வயது மூத்த ஆசிரியையை மணந்த மக்ரோன்: பிரான்ஸ் அதிபர் வேட்பாளரின் சுவாரஸ்ய காதல்

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2017 | 5:25 pm

பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வகுப்பு ஆசிரியை பிரிஜிட் டிராக்னக்ஸ் என்பவரைக் காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்ட பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் இமானுவல் மக்ரோனின் சுவாரஸ்யமான காதல் கதை தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

தனது 15 வயதில் வகுப்பு ஆசிரியை டிராக்னக்ஸைக் காதலித்த பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் இமானுவல் மக்ரோன், தனது 30 ஆவது வயதில் அவரையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

2007 இல் நடைபெற்ற இந்தத் திருமணத்தின் போது டிராக்னஸுக்கு 55 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் அதிபருக்கான 2 ஆம் மற்றும் இறுதிச்சுற்றுத் தேர்தல் எதிர்வரும் மே 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முதல் சுற்றுத் தேர்தலில் 23.75 சதவீத வாக்குகள் பெற்று மக்ரோன் முதலிடம் பிடித்துள்ளார். லி பென் 21.53 சதவீத வாக்குகள் பெற்று, 2 ஆவது இடத்தில் உள்ளார்.

முதல் சுற்றில் தோல்வியடைந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர், 2 ஆவது சுற்றில் மக்ரோனுக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மக்ரோனின் வெற்றி ஏறத்தாழ முடிவாகியுள்ளது.

இந்நிலையில், மக்ரோனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த போது தனது 15 ஆவது வயதில் (1993 இல்) ஒரு நாடக அரங்கேற்றத்தின் போது வகுப்பு ஆசிரியர் டிராக்னக்ஸ் மீது மக்ரோன் காதல் வயப்பட்டுள்ளார். அப்போது டிராக்னஸுக்கு 42 வயது. அவரது 15 வயது மகளும் மக்ரோனுடன் அதே வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். இதனால் டிராக்னக்ஸின் மகளைத் தான் அவர் காதலிக்கிறார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பின் டிராக்னக்ஸை வேறொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த மக்ரோன் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது 3 குழந்தைகளுக்குத் தாயாகவிருந்த அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் மக்ரோனுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதையடுத்து, 2007 இல் இருவரும் திருணம் செய்து கொண்டுள்ளனர்.

தற்போது 64 வயதான டிராக்னக்ஸுக்கு 7 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்