பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது ஆன்மீகத் தலைவர்களின் வழிகாட்டல் முக்கியமானது: ஜனாதிபதி

பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது ஆன்மீகத் தலைவர்களின் வழிகாட்டல் முக்கியமானது: ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2017 | 8:33 pm

உலகிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது ஆன்மீகத் தலைவர்களின் வழிகாட்டல் மிக முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை இஸ்லாமிய மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.

இஸ்லாமின் யதார்த்தம், நேர சவால்கள் எனும் தொனிப்பொருளின் கீழ் இரண்டு நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்