வைகோவை ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவு

வைகோவை ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவு

வைகோவை ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2017 | 6:59 pm

தேசத்துரோக வழக்கில் கைதாகியுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோவை எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய வை.கோபாலசுவாமி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியதாகக் குறிப்பிட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அவர் கருத்துத் தெரிவித்தமை இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பல வருடங்களாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 3 ஆம் திகதி வைகோ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, சொந்தப் பிணையில் அவரை விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், வைகோ அதனை ஏற்க மறுத்தார்.

இதனையடுத்து, வைகோவை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதுடன், வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்