வட, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்

வட, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2017 | 11:15 am

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், மக்களின் காணிகளை விடுக்குமாறு வலியுறுத்தியும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று (27) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதேவேளை ஹர்த்தாலை முன்னிட்டு வட மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைவாக வடக்கில், குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்