பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா காலமானார்

பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா காலமானார்

பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா காலமானார்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2017 | 2:09 pm

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா தனது 70 ஆவது வயதில் மும்பையில் காலமானார்.

கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், 2 நாட்களுக்கு முன்னர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மும்பையில் காலமானார்.

பஞ்சாப்புக்கான பாராளுமன்ற உறுப்பினரான வினோத் கண்ணா பாலிவுட்டில் 100 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வினோத் கண்ணாவுக்கு முன்னதாகவே கீதாஞ்சலியுடன் திருமணமாகி பின்னர் விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் தீவிர கவனம் காட்டி வந்த வினோத் கண்ணா சமீபத்தில் `தபாங்’, `ப்ளேயர்ஸ்’, `தபாங் 2′, `தில்வாலே’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

201704271236421068_vinod2._L_styvpf.gif

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்