நீர்ப்பாசனத் திட்டங்களின் அபிவிருத்திக்கான தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

நீர்ப்பாசனத் திட்டங்களின் அபிவிருத்திக்கான தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

நீர்ப்பாசனத் திட்டங்களின் அபிவிருத்திக்கான தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2017 | 7:35 am

காலநிலை மாற்றம் தொடர்பில் உரிய ஆய்வை மேற்கொண்டு, நீர்ப்பாசனத் திட்டங்களின் எதிர்கால அபிவிருத்திக்கான தீர்மானங்களை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்கான மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இந்த கூட்டம் மாகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று (26) மாலை இடம்பெற்றது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் அமுல்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்