ஒன்பது மாகாணங்களுக்குமான புதிய சேதனப் பசளை உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிக்க தீர்மானம்

ஒன்பது மாகாணங்களுக்குமான புதிய சேதனப் பசளை உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிக்க தீர்மானம்

ஒன்பது மாகாணங்களுக்குமான புதிய சேதனப் பசளை உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2017 | 9:08 am

ஒன்பது மாகாணங்களுக்குமான புதிய சேதனப் பசளை உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தீர்மானித்துள்ளார்.

அனைத்து மாகாணங்களிலும் 50 மெட்ரிக்தொன் சேதன பசளை உற்பத்தி செய்யக்கூடிய நிலையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழகியுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

இதனால் தேசிய ரீதியாக கழிவகற்றல் செயற்பாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் பாரியளவிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

சேகரிக்கப்படும் குப்பைகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவது தொடர்பாகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்