இலங்கைக்கு GSP+ வரிச்சலுகை வழங்கப்படுவதற்கு எதிரான பிரேரணை தோல்வி

இலங்கைக்கு GSP+ வரிச்சலுகை வழங்கப்படுவதற்கு எதிரான பிரேரணை தோல்வி

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2017 | 5:05 pm

இலங்கைக்கு GSP+ வரிச்சலுகை வழங்கப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ளது.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 119 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், எதிராக 436 வாக்குகள் கிடைத்துள்ளன.

அதற்கமைய, GSP+ வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கான தீர்மானம் விரைவில் ஐரோப்பிய பாராளுமன்றத்தினூடாக நிறைவேற்றப்படவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 52 உறுப்பினர்கள் கடந்த 22 ஆம் திகதி இந்த பிரேரணையை சமர்ப்பித்திருந்தனர்.

இலங்கைக்கு GSP+ வரிச்சலுகை வழங்கப்படக்கூடாதென இந்த பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியிருந்தது.

GSP+ வரிச்சலுகைக்கான நிபந்தனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மறுசீரமைப்பு பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டியிருந்தது.

அத்துடன், இலங்கையின் தொழிலாளர் சட்டத்திலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக இந்தக் குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்