தோனியை வாங்க எனது பைஜாமாவைக் கூட விற்கத் தயார்: ஷாருக் கான்

தோனியை வாங்க எனது பைஜாமாவைக் கூட விற்கத் தயார்: ஷாருக் கான்

தோனியை வாங்க எனது பைஜாமாவைக் கூட விற்கத் தயார்: ஷாருக் கான்

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2017 | 3:21 pm

IPL ஏலத்திற்கு தோனி வந்தால் அவரை வாங்க தனது பைஜாமாவைக் கூட விற்கத் தயார் என பொலிவுட் நடிகரும் கொல்கத்தா அணி உரிமையாளருமான ஷாருக் கான் தெரிவித்தார்.

தோனி, விராட் கோலி ஆகியோர் அடுத்த ஆண்டு IPL ஏலத்தில் வருவார்கள், என்ன விலை கொடுத்தாவது அவர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என பலரும் தயாராகி வருகிறார்கள்.

கேப்டன் தோனி ரைசிங் புனே சுப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், தோனியை கொல்கத்தா அணிக்காக வாங்க ஆசைப்படுகிறார் பொலிவுட் நடிகர் ஷாருக் கான்.

”தோனியை வாங்க என் பைஜாமாவைக் கூட விற்கத் தயார். ஆனால், அதற்கு முதலில் தோனி ஏலத்தில் வர வேண்டுமே. அவர் ஏலத்தில் வருவது இல்லை,” என்று பொலிவுட் நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.

தடை முடிந்து அடுத்த ஆண்டு களத்தில் குதிக்கவுள்ளது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி.

சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் தோனியே வருவார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்