வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2017 | 1:16 pm

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலத்தின் புதிய அதிபருக்கு எதிராக இன்று (26) காலை முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள், பழைய மாணவர்கள், மற்றும் பெற்றோர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் கடமையாற்றிய அதிபரே தொடர்ந்தும் கடமையாற்ற வேண்டும் என பாடசாலை மாணவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் வவுனியா வலய கல்வி பணிப்பாளர் எம்.இராதாகிருஷ்ணனிடம் வினவிய போது உரிய நடைமுறைக்கு அமைவாகவே புதிய அதிபரின் நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

ஏற்கனவே கடமையிலிருந்த அதிபரை தொடர்ந்தும் அந்த பதவியில் அமர்த்துமாறு கோரி மகஜர் ஒன்று தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.இராதாகிருஷ்ணன் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்