வட்சன் நிறுவன ஆலோசனைக் குழுவிற்கு கெப்பிட்டல் மகாராஜாவின் குழுமப் பணிப்பாளர் நியமனம்

வட்சன் நிறுவன ஆலோசனைக் குழுவிற்கு கெப்பிட்டல் மகாராஜாவின் குழுமப் பணிப்பாளர் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2017 | 8:25 pm

அமெரிக்காவின் பிரபல உயர் கல்வி நிறுவனமான Brown பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சர்வதேச மக்கள் விவகாரம் தொடர்பிலான வட்சன் நிறுவனம் (Watson Institute) அதன் உலகளாவிய ஆலோசனைக் குழுவிற்கு வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியலை நியமித்துள்ளது.

மனிதாபிமான முயற்சிகளுக்கு வழிகாட்டல்களை வழங்குவது இந்த ஆலோசனைக் குழுவின் பொறுப்பாகும்.

மனிதாபிமான முயற்சிகளுக்கான வழிகாட்டல்களை வழங்கும் வட்சன் நிறுவனத்தின் உலகளாவிய ஆலோசனைக் குழுவில் புத்திஜீவிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

கலாநிதி அடம்ஸ் லிவைன் இந்த குழுவின் தலைவராக செயற்படுகின்றார்.

லைபீரியாவில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்காற்றிய சேவையைக் கருத்திற்கொண்டு டைம்ஸ் சஞ்சிகை கலாநிதி அடம்ஸ் லிவைனை வருடத்தின் சிறந்த மனிதராகக் கௌரவித்திருந்தது.

இந்த உலகளாவிய ஆலோசனைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட முதலாவது இலங்கையராக ஷெவான் டேனியல் பதிவாகியுள்ளார்.

உலக சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆய்வுகளை இலக்காகக் கொண்டு பிரவுன் பல்கலைக்கழகம் 1764 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்