மே 30 முதல் வேலை நிறுத்தம்; எந்தவொரு திரையரங்கிலும் படம் ஓடாது: விஷால் அறிவிப்பு

மே 30 முதல் வேலை நிறுத்தம்; எந்தவொரு திரையரங்கிலும் படம் ஓடாது: விஷால் அறிவிப்பு

மே 30 முதல் வேலை நிறுத்தம்; எந்தவொரு திரையரங்கிலும் படம் ஓடாது: விஷால் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2017 | 4:39 pm

திருட்டு VCD யை ஒழிக்கும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மே 30 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக விஷால் அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர் ஞானவேல் ராஜா, திரையரங்கு உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன், ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய விஷால், “மே 30 ஆம் திகதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்தவொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என தயாரிப்பாளர் சங்கமும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் முக்கிய அமைப்புகளும் இணைந்து முடிவெடுத்துள்ளோம்.

திருட்டு VCDயால் தயாரிப்பாளர்களுக்கு வரும் வருமானம் குறைந்து விட்டது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் மீண்டும் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். திருட்டு VCD யைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோத இணையத்தளம் மூலம் படம் பதிவிறக்கம் செய்யப்படுவதையும் தடுக்க வேண்டும்.”

என குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்