புதிய நிறப்பூச்சு வகையை சந்தையில் அறிமுகம் செய்தது கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம்

புதிய நிறப்பூச்சு வகையை சந்தையில் அறிமுகம் செய்தது கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம்

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2017 | 9:00 pm

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் புதிய நிறப்பூச்சு வகையை சந்தையில் இன்று அறிமுகம் செய்துவைத்தது.

கன்சாய் பெயின்ட்ஸ் லங்கா தனியார் நிறுவனம் (Kansai Paints Lanka Private Limited) எனும் பெயரில் இன்று திறந்துவைக்கப்பட்ட இந்த புதிய உற்பத்தி தொழிற்சாலை கொக்கல முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ளது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் கீழ் இயங்கும் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் மகாராஜா தனியார் நிறுவனம் (Capital Holdings Maharaja Pvt Ltd), ஜப்பானின் முன்னணி நிறப்பூச்சு உற்பத்தி நிறுவனமான Kansai Nerolac Paints நிறுவனத்துடன் இணைந்து இந்த உற்பத்தியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கான அறிமுக நிகழ்வில் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கன்சாய் நிறப்பூச்சுக்களின் அறிமுகம் இலங்கையில் வெற்றிகரமாக அமையும் என வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளரான, பிரதம நிறைவேற்று அதிகாரி மொகான் பராரா இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்தார்.

அத்துடன், புதிய நிறப்பூச்சு உற்பத்தியுடன் தொடர்புடைய சகல தரப்புகளுக்கும் அவர் இதன்போது நன்றிகளைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்