பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு புதிய பதவி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு புதிய பதவி

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2017 | 1:07 pm

முப்படை உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்புடன் செயலாற்ற கூடிய விதத்தில் புதிய பதவியொன்றை உருவாக்கி, அதற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை கூறியுள்ளதுடன், இரண்டு வருட காலத்திற்காக இந்த புதிய பதவியை உருவாக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகி, புதிய பதவியை ஏற்றுக் கொள்வதற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விருப்பம் தெரிவித்ததாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிப்பகிஷ்கரிப்புகள் , ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட செயற்பாடுகளை கவனத்திற்கொண்டு இந்த புதிய பதவியை உருவாக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்