பிரமுகரைக் கொல்ல சதித்திட்டம்: ஐந்து சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பிரமுகரைக் கொல்ல சதித்திட்டம்: ஐந்து சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பிரமுகரைக் கொல்ல சதித்திட்டம்: ஐந்து சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2017 | 7:57 pm

பிரமுகர் ஒருவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நீதவான், ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் சந்தேகநபர்கள் ஐந்து பேரும் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சதித்திட்டம் தொடர்பில் புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்ட ஐந்து பேர், கடந்த ஜனவரி மாத இறுதியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்