தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் கருத்து மோதல்

தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் கருத்து மோதல்

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2017 | 7:43 pm

தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் இன்று கருத்து மோதல் ஏற்பட்டது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 20 மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடையைக் கண்டித்து இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட மாணவ சங்கங்கள் தயாராகவிருந்தன.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முற்பட்டதால் அங்கு கருத்து மோதல் ஏற்பட்டது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரே பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் பதாகைகளை அகற்ற முயன்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களும் தனித்தனியாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்