இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2017 | 10:16 pm

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டாரிஸ் (James Dauris), எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதியில் பொதுமக்களின் காணிகளை பாதுகாப்புப் பிரிவினர் கையகப்படுத்தியுள்ளதால் காணி உரிமையாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் இதன்போது எடுத்துக்கூறியுள்ளார்.

மேலும், காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைகள் தீர்வின்றிக் காணப்படுவதாகவும் அதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசாரணை செயலணியின் செயற்பாடுகள் தாமதப்படுத்தப்படுவதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்