இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2017 | 6:51 am

இரண்டாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (26) ஆரம்பமாகவுள்ளன.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அஷோக சேனானி ஹேவகே தெரிவித்தார்.

நேற்று முன்தினமும் நேற்றைய தினமும் பாடசாலை சுற்றுச்சூழலில் துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை சூழல், நுளம்புகள் மற்றும் குப்பைகளின்றி இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்