இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் டிடிவி தினகரன் கைது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் டிடிவி தினகரன் கைது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் டிடிவி தினகரன் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2017 | 8:35 am

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு, இலஞ்சம் கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில், அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையக அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று (25) நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

கடந்த நான்கு நாட்களாக விசாரணைகளை முன்னெடுத்த டெல்லி பொலிஸார், சுமார் 35 மணித்தியாலம் விசாரணை நடத்தி, அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தினகரனை கைது செய்துள்ளனர்.

டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இரு அணியினரும், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரினர்.

இந்த நிலையில், கடந்த வாரம் சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் ஒருவரை டெல்லி குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்து விசாரணை செய்தனர்.

இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தருவதற்கு, தேர்தல் ஆணையக அதிகாரிக்கு இலஞ்சம் கொடுப்பதற்காக, தினகரனிடம் அவர் பணம் பெற்றிருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அவரிடமிருந்து 1.3 கோடி ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது.

இதனடிப்படையில், தினகரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவந்த டெல்லி பொலிஸார் நேற்று (25) நள்ளிரவு அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனும், மல்லிகார்ஜுனாவும் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்படவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்