விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் கடற்படையினரிடம் ஒப்படைப்பு

விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் கடற்படையினரிடம் ஒப்படைப்பு

விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் கடற்படையினரிடம் ஒப்படைப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Apr, 2017 | 6:42 pm

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், விடுதலை செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் ஏழு பேர் இன்று கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளத்தை அண்மித்த சர்வதேச கடல் எல்லையில், இந்திய கடலோரப் பாதுகாப்புப் பிரிவினரால் இன்று முற்பகல் மீனவர்கள் கையளிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

இலங்கை மீனவர்களின் படகும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

திக்கோவிட்ட துறைமுகத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்ற படகொன்று கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த படகில் பயணித்த 7 மீனவர்கள் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதனை அடுத்து, இந்திய மத்திய அரசின் வேண்டுகோளுக்கு அமைய கடந்த 21 ஆம் திகதி இலங்கை மீனவர்கள் ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்