வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான திட்ட வரைவு வெளியிடப்பட்டது

வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான திட்ட வரைவு வெளியிடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

25 Apr, 2017 | 8:31 pm

வடக்கு – கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் படையினர் வசமிருந்த சுமார் 4500 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சின் தகவல்களின் படி, யாழ். மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 2991.2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 1000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 474 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 49 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலும் 3500 ஏக்கர் காணி படையினர் வசம் காணப்படுதுடன், அந்த காணிகளை விடுவிப்பதற்கான திட்டத்தினையும் மீள்குடியேற்ற அமைச்சு வகுத்துள்ளது.

யாழ். மாவட்டம்

இந்த வருடம் யாழ். மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 225 ஏக்கர் அரச காணியும் 34.68 ஏக்கர் தனியார் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.

யாழ். மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 2.2 ஏக்கர் அரச காணியும் 2.52 ஏக்கர் தனியார் காணியும் 2018 ஆம் ஆண்டு விடுவிக்கப்படவுள்ளது.

2019 ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் உள்ள 1.06 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டில் 23.48 ஏக்கர் அரச காணியும் 36.71 ஏக்கர் தனியார் காணியும் விடுவிக்கப்படவுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

மேலும், படையினர் வசமுள்ள 19.76 ஏக்கர் அரச காணியும் 3.33 ஏக்கர் தனியார் காணியும் 2018 ஆம் ஆண்டு விடுவிக்கப்படவுள்ளது.

2019 ஆம் ஆண்டு படையினர் வசமுள்ள 10.01 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு 16.77 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

மேலும், 2021 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 25.98 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு 2613 .4 ஏக்கர் அரச காணியை விடுவிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

2018 ஆம் ஆண்டு 0.78 ஏக்கர் அரச காணி விடுவிக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்டம்

இவ்வாண்டில் 14.81 ஏக்கர் அரச காணியும் 07 ஏக்கர் தனியார் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.

வவுனியா மாவட்டம்

இவ்வாண்டில் வவுனியா மாவட்டத்தில் 3.50 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டில் 6.29 ஏக்கர் அரச காணியும் 44 ஏக்கர் தனியார் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.

2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 6.83 அரச காணி விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு 4 ஏக்கர் அரச காணியும் 3 ஏக்கர் தனியார் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.

2019 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1.25 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டம்

அம்பாறை மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு படையினர் வசமுள்ள 0.12 ஏக்கர் அரச காணி விடுவிக்கப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்