மீதொட்டமுல்லயில் பாதிக்கப்பட்டோருக்கான கொடுப்பனவை ஒரே தடவையில் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

மீதொட்டமுல்லயில் பாதிக்கப்பட்டோருக்கான கொடுப்பனவை ஒரே தடவையில் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Bella Dalima

25 Apr, 2017 | 8:24 pm

மீதொட்டமுல்லயில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதத்திற்கு 50,000 ரூபா வீதம் வழங்கப்படவுள்ள மூன்று மாதங்களுக்கான கொடுப்பனவை ஒரே தடவையில் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

வாடகை வீடுகளைப் பெற்றுக்கொள்ளும்போது பிரச்சினையின்றி முற்பணத்தை செலுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளில் குப்பைகளை முகாமைத்துவத்திற்கு உட்படுத்தும் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது.

கழிவுப்பொருள் முகாமைத்துவம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் தயாரித்துள்ள திட்டங்களை சமர்பிக்குமாறு இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அனைத்து மாகாண உதவி ஆணையாளர்களையும் தம்மை சந்திப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, மீதொட்டமுல்லயில் வீடுகளை இழந்த 68 பேருக்கு இன்று வீடுகள் கையளிக்கப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்