மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் நுர் இஷா அன்வர் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் நுர் இஷா அன்வர் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Apr, 2017 | 10:13 pm

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் நுர் இஷா அன்வர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் சுமூகமாக வாழ்க்கையைக் கொண்டு செல்கின்ற போதிலும் தொடர்ந்தும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றமை குறித்து எதிர்க்கட்சித் தலைவரால் மலேசிய பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காணி விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட காரணிகள் குறித்து சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்