பொலிவுட் நடிகைக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷஹீர் கானுக்கும் நிச்சயதார்த்தம்

பொலிவுட் நடிகைக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷஹீர் கானுக்கும் நிச்சயதார்த்தம்

பொலிவுட் நடிகைக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷஹீர் கானுக்கும் நிச்சயதார்த்தம்

எழுத்தாளர் Bella Dalima

25 Apr, 2017 | 4:30 pm

பொலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் சகரிகா கட்ஜ், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷஹீர் கான் ஆகியோரிக்கு நேற்றைய தினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹொக்கியை மையமாக வைத்து கடந்த 2007 இல் இந்தியில் வெளியான `சக் தே இந்தியா’ படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் சகரிகா கட்ஜ்.

இப்படத்தில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இப்படம் மூலம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், சகரிகா கட்ஜூக்கும் பிரபல கிரிக்கெட் வீரரான ஷஹீர் கானுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

இருவருமே சில வருடங்களாகக் காதலித்து வருவதுடன், பொது நிகழ்ச்சிகளிலும் இணைந்து பங்கேற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்