பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியா பயணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியா பயணம்

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2017 | 6:48 am

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியாவுக்குப் பயணமாகவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (25) இந்தியாவுக்குப் பயணமாகவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் ஈடுபடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

பிரதமரின் இந்திய விஜயத்துடன், பிரதமரின் பாரியார் மைத்ரி விக்ரமசிங்க, இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் இணைந்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்