பாடசாலைகளில் இடம்பெறும் டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

பாடசாலைகளில் இடம்பெறும் டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2017 | 6:58 am

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்புப் பணிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பாடசாலைகளின் சூழல்களை துப்புரவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சகல பாடசாலைகளினதும் அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், டெங்கு அபாயம் கூடுதலாக பாடசாலைகளின் சூழல்கள் தொடர்பாக விசேட குழுக்கள் ஊடாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருக்கும் பாடசாலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்