தந்தையை பதவி நீக்கியமையால் பிரமித்த பண்டார தென்னக்கோன் இராஜினாமா

தந்தையை பதவி நீக்கியமையால் பிரமித்த பண்டார தென்னக்கோன் இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

25 Apr, 2017 | 7:33 pm

பாராளுமன்ற உறுப்பினர் ஜனக்க பண்டார தென்னக்கோனின் மகனான பிரமித்த பண்டார தென்னக்கோன், மத்திய மாகாண அமைச்சுப் பதவியில் இருந்து இன்று இராஜினாமா செய்துள்ளார்.

ஜனக்க பண்டார தென்னக்கோன் தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரமித்த பண்டார தென்னக்கோன் தமது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்கவிடம் பிரமித்த பண்டார தென்னக்கோன் இன்று மாலை தனது இராஜினாமாக் கடிதத்தைக் கையளித்தார்.

மத்திய மாகாண விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம், மகளிர் விவகாரம், கிராமிய அபிவிருத்தி ஆகிய அமைச்சுப் பொறுப்புக்களை பிரமித்த பண்டார தென்னக்கோன் வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்