சலுகைகளும் உரிமைகளும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு சமமாகக் கிடைக்க வேண்டும்: ஜீ.கே.வாசன்

சலுகைகளும் உரிமைகளும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு சமமாகக் கிடைக்க வேண்டும்: ஜீ.கே.வாசன்

சலுகைகளும் உரிமைகளும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு சமமாகக் கிடைக்க வேண்டும்: ஜீ.கே.வாசன்

எழுத்தாளர் Bella Dalima

25 Apr, 2017 | 6:02 pm

இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், உரிமைகள் அனைத்தும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பில் ஜீ.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைப் பிரதமர் தமது இந்திய விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதை இலங்கை பிரதமரிடம் இந்தியா உறுதியாகத் தெரிவிக்க வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மேலும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிப்பதற்கான உரிமையை இலங்கை வழங்க வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 133 விசைப்படகுகளை விடுவித்தல், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கல் போன்றவற்றை செயற்படுத்துமாறு பிரதமர் மோடி இலங்கைப் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் எனவும்
ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்