கிழக்கு மாகாண சபைக் கட்டட நுழைவாயிலை மறித்து வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண சபைக் கட்டட நுழைவாயிலை மறித்து வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

25 Apr, 2017 | 8:50 pm

கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர், மாகாண சபைக் கட்டடத்தின் நுழைவாயிலை மறித்து, வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி திருகோணமலை நீதிமன்றத்தில் பொலிஸார் முறைப்பாடு தாக்கல் செய்திருந்தனர்.

இதனைக் கவனத்திற்கொண்ட திருகோணமலை பிரதம நீதவான் எம்.எச்.எம். ஹம்சா, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கினார்.

வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மாகாண சபையின் அமர்வு ஆரம்பமானது.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான அவசரப் பிரேரணையை இரா.துரைரெட்ணம் முன்வைத்தார்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர், கல்வி அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்