இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் அடையாளம் காணப்படும் காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் அடையாளம் காணப்படும் காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் அடையாளம் காணப்படும் காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2017 | 7:35 am

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் அடையாளம் காணப்படும் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் சுமார் 75 வீதமான காணிகளை இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.ஆர். ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

எஞ்சியுள்ள காணிகளில் பெரும்பாலானவை அரச காணிகள் என்றும் அவர் கூறினார்.

மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து, அடையாளம் காணப்படுகின்ற காணிகளை விடுவிப்பதற்கான கள விஜயங்களை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு , கிளிநொச்சி , மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டிய காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதவிர மன்னார் உள்ளிட்ட பகுதியிலும் காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.ஆர். ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்