அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களை தங்கவைப்பதற்கு 3  விசேட நிலையங்கள் ஸ்தாபிப்பு

அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களை தங்கவைப்பதற்கு 3 விசேட நிலையங்கள் ஸ்தாபிப்பு

அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களை தங்கவைப்பதற்கு 3 விசேட நிலையங்கள் ஸ்தாபிப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2017 | 10:32 am

மேல் மாகாணத்தில் அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படும் மக்களை தங்கவைப்பதற்கான மூன்று விசேட நிலையங்களை ஸ்தாபிக்க இடர் முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்பொருட்டு மீதொட்டமுல்ல பிரதேசத்திலுள்ள நெற் சந்தைப்படுத்தல் சபையின் மூன்று கட்டடங்களை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார்.

இந்த கட்டடங்களை பொறுப்பேற்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

குறிப்பிட்ட கட்டடங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளன.

மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்