வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 18 மலேரியா நோயாளர்கள் பதிவு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 18 மலேரியா நோயாளர்கள் பதிவு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 18 மலேரியா நோயாளர்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2017 | 2:56 pm

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மலேரியா நோயாளர்கள் 18 பேர் பதிவாகியுள்ளதாக மலேரியா தடுப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மலேரியா தொற்றுக்குள்ளானவர்களில் வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குவதாக மலேரியா தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளிலிருந்து வருவோர் மலேரியா தொற்றுக்குள்ளாகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இலங்கையிலிருந்து வர்த்தகம், யாத்திரை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளின் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வோர் மலேரியா தொற்றுக்குள்ளாகுவதாகவும் டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்