மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு: ஜப்பான் நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு: ஜப்பான் நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2017 | 7:29 pm

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பிலான ஜப்பான் நிபுணர் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (24) சமர்ப்பிக்கப்பட்டது.

குப்பை மேடு சரிவிற்கான காரணங்கள் மற்றும் அவ்வாறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ஜப்பான் நிபுணர் குழு நாட்டிற்கு வருகை தந்தனர்.

இதுதொடர்பான அறிக்கை ஜப்பான் நிபுணர் குழுவின் தலைவரால், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், தமது பரிந்துரைகள் தொடர்பாகவும் இதன்போது அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தற்காலிக நடவடிக்கையாக குப்பை மேட்டின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தி, பொலித்தீன்களால் மூடுதல் மற்றும் எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக குப்பை மேட்டின் அமைவிடத்தை சீரமைத்தல் போன்ற பரிந்துரைகளை ஜப்பான் நிபுணர் குழு முன்வைத்துள்ளது.

குப்பை மேட்டின் அளவை படிப்படியாகக் குறைத்து, மீள்சுழற்சி, எரிசக்தி உற்பத்தி மற்றும் இயற்கை உரம் தயாரித்தல் என்பவற்றை முன்னெடுப்பதற்காக நீண்டகால அடிப்படையிலான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்