மீதொட்டமுல்ல குப்பை மேடு பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியம் உதவ முன்வந்துள்ளது –  நிதி அமைச்சர்

மீதொட்டமுல்ல குப்பை மேடு பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியம் உதவ முன்வந்துள்ளது –  நிதி அமைச்சர்

மீதொட்டமுல்ல குப்பை மேடு பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியம் உதவ முன்வந்துள்ளது –  நிதி அமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2017 | 12:10 pm

மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினைக்கு, சர்வதேச நாணய நிதியம் உதவ முன்வந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பியதை அடுத்து அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டின் போது, மீதொட்டமுல்ல குப்பை மேடு குறித்து சர்வதேச நாயண நிதியத்தினர் வினவியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குவதற்கான நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த பிரச்சினைக்கு தேவையான ஏனைய உதவிகளையும் வழங்க தயார் என சர்வதேச நாயண நிதிய பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்