மீதொட்டமுல்லயில் இருந்து 300 வீடுகளை அகற்ற வேண்டியுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவிப்பு

மீதொட்டமுல்லயில் இருந்து 300 வீடுகளை அகற்ற வேண்டியுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2017 | 8:40 pm

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்து இன்றுடன் 11 நாட்கள் ஆகின்றன.

இராணுவத்தினர் இன்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டதுடன் குப்பைமேடு மீண்டும் சரிந்து விழாமல் இருக்கும் வகையில் விசேட திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டது.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கொலன்னாவ நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலையில் தங்கியுள்ளதுடன் களஞ்சியசாலையை புனரமைக்கும் பணிகள் இன்றும் இடம்பெற்றன.

மக்கள் தங்கியிருக்கக்கூடிய வகையில் இந்த களஞ்சியசாலை புனரமைக்கப்பட்டுள்ளதுடன் முதல் கட்டத்தில் 26 குடும்பங்கள் தங்கவைக்கப்படவுள்ளதுடன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்கவைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை மீதொட்டமுல்ல அபாய வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையை இன்று ஆரம்பித்தாக கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.

அவர்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் வரை இந்தக் கொடுப்பணவை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர இது தொடர்பில் பருத்து தெரிவிக்கையில்….

[quote]அபாய வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டிய வீடுகளை அடையாளம் கண்டுவருகின்றோம். குறிப்பாக அவ்விடத்திலிருந்து சுமார் 300 விடுகளை அகற்ற வேண்டும் அத்துடன் வீடுகளை இழந்த மக்களுக்கு அவர்களின் உடமைகளுக்கான இழப்பீடுகளை வழங்கவும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம். வீட்டு உபகரணங்கள் முழுமையாக சேதமடைந்திருந்தால் இரண்டு 250,000 ரூபா வழங்குகின்றோம். விருப்பமானவர்களுக்கு அரசாங்கத்தின் மாடி வீடொன்றும் வழங்கப்படும்.[/quote]

இதேவேளை கொலன்னாவை ராகுல வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவர்களை டென்ஸ் சில்வா வித்தியாலயத்தில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு 100 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்ஜித் சோமவங்ச தெரிவித்தார்.

ராகுல வித்தியாலயத்தின் ஆசிரியர்களையும் அதிபரையும் டெரன்ஸ் டி சில்வா வித்தியாலயத்தில் சேர்த்துக்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை கொலன்னாவை நகர சபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர உதயசாந்த இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்திருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்